திருக்குறள் பேரவை கூட்டம்

மயிலாடுதுறையில் திருக்குறள் பேரவை கூட்டம் நடந்தது

Update: 2023-07-31 18:45 GMT

மயிலாடுதுறை திருக்குறள் பேரவையின் 104-வது மாத கூட்டம் தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. கூட்டத்துக்கு பேரவை தலைவர் சிவசங்கரன் தலைமை தாங்கினார். மயிலாடுதுறை வணிகர் சங்க செயலாளர் புலவர் செல்வம் முன்னிலை வகித்தார். பேரவை செயலாளர் நல்லாசிரியர் செல்வகுமார் வரவேற்றார். "பாரதி போற்றிய வள்ளுவம்" என்ற தலைப்பில் குமாரபாளையம் தனியார் கல்லூரியின் தமிழ் பேராசிரியர் சங்கரராமபாரதி பேசினார். முன்னதாக பள்ளி மாணவர்கள் கண்மணி, சுவாதி, முகேஷ், கோகுல் ஆகியோர் குறளும் பொருளும் என்ற தலைப்பில் பேசினர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை இணைச் செயலாளர் இமயவரம்பன் செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் செய்தி தொடர்பாளர் முத்துக்கணியன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் பேரவை பொருளாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார். விழாவில் தமிழ் ஆர்வலர்கள், பேரவை உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்