திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் சாமி தரிசனம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் சாமி தரிசனம் செய்தார்.
திருக்கடையூர்,
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலுக்கு தினந்தோறும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்
இந்த நிலையில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் அவரது மனைவி மாலதி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தார்.
அப்போது அவருக்கு கோயில் நிர்வாகத்தினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் கோ பூஜை, கஜ பூஜை செய்து வழிபட்டார். அவருக்கு 66 -வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு ஆயுள் விருத்தி ஹோமம் செய்து வழிபட்டார்.
தொடர்ந்து கோவிலுக்கு சென்று விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காளசம்ஹாரமூர்த்தி, அபிராமி அம்மன் சன்னிதிக்கு சென்று வழிபட்டார்.