காசி விஸ்வநாதர் விசாலாட்சி தாயாருக்கு திருக்கல்யாணம்

தேசூரில் காசி விஸ்வநாதர் விசாலாட்சி தாயாருக்கு திருக்கல்யாணம் நடந்தது.

Update: 2023-04-30 16:37 GMT

சேத்துப்பட்டு

தேசூர் பேரூராட்சியில் உள்ள காசி விசுவநாதர் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் 5-ம் நாளில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. விசாலாட்சி தாயார் சமேத காசி விஸ்வநாதர், வள்ளி, தெய்வானை, முருகர், விநாயகர், நடராஜர் ஆகிய மூலவருக்கும், உற்சவர்களுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் காசி விஸ்வநாதர், விசாலாட்சி தாயார் உற்சவமூர்த்திக்கு மலர் அலங்காரம் செய்து கோவில் மாடவீதியில் முத்துபல்லக்கில் வைத்து திருக்கல்யாணம் நடந்தது.

நாதஸ்வரம், மேள கச்சேரியுடன், தங்கத்தாலி, பட்டு வேட்டி, பட்டு துண்டு 9 வகை தட்டு வரிசைகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து கொண்டு கோவிலுக்கு வந்தனர்.

பின்னர் திருக்கல்யாண வைபோகம் நடந்தது. இரவு ரிஷப வாகனத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி தாயார் வைத்து முக்கிய வீதியில் வழியாக எடுத்து வந்தனர்.

தொடர்ந்து வாணவேடிக்கை நடந்தது. பக்தர்களுக்கு திருமண விருந்து வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை 5-ம் நாள் உற்சவதாரர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்