வீற்றிருந்த சிவயோக நாராயணப்பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

வீற்றிருந்த சிவயோக நாராயணப்பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

Update: 2022-10-06 18:33 GMT

ஆவுடையார்கோவில்:

ஆவுடையார்கோவில் அருகே வடக்களூரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீற்றிருந்த சிவயோக நாராயணப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் பிரம்மோற்சவ விழாவையொட்டி திருக்கல்யாண வைபோகம் நேற்று இரவு நடைபெற்றது. இதையடுத்து வடக்களூர் கிராம மக்கள் திருக்கல்யாணத்திற்காக சீர்வரிசை பொருட்களை கொண்டு வந்தனர். அதன்பிறகு திருக்கல்யாண வைபோக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வடக்களூர் சுற்றுவட்டார கிராமத்திலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அனைத்து மண்டகப்படிதாரர்கள் மற்றும் வடக்களூர் கிராமமக்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்