சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருமயத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவாடிப்பூரம் உற்சவ பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வந்தது. மேலும் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து 6-வது நாளான நேற்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக மாலை 5 மணிக்கு ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் பெரியவீதி, பசுமடம் வீதி, கருப்பர் கோவில் வீதி, ஊத்துக்கேணி வீதி, மெய்யமலை வீதி வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து இரவு 8 மணியளவில் சுந்தரபாண்டி மண்டபத்தில் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சத்தியமூர்த்தி பெருமாள், ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.