கிருஷ்ணகிரியில் பாண்டுரங்கர், ருக்குமணி கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் கும்பாபிஷேகம்
கிருஷ்ணகிரி அருகே அக்ரஹாரம் சிவாஜிநகர் பாண்டுரங்க ருக்மணி சுவாமி கோவில் கும்பாபிஷேகம், 87-வது பிரம்மோற்சவ விழா கடந்த 29-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 29-ந் தேதி காலை சிறப்பு பூஜைகளுடன், கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
நேற்று காலை சிறப்பு பூஜை, யாகம் நடத்தப்பட்டு பாண்டுரங்கர், ருக்மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதையடுத்து ஓசூர் ஹரிதாச ரத்னா கிருஷ்ணமூர்த்தி பாகவதரின் சிறப்பு பஜனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அன்னதானம்
மகா தீபாராதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு உற்சவமூர்த்திகள் கிருஷ்ணகிரி நகரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இன்று காலை 10.30 மணிக்கு மகா மங்களார்த்தி நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை பாண்டுரங்க ருக்மணி பக்த மண்டலி விழாக்குழுவினர் செய்திருந்தனர்.