மூலநாதர் கோவிலில் திருக்கல்யாணம்

குடவாசல் அருகே சீதக்கமங்கலம் மூலநாதர் கோவிலில் திருக்கல்யாணம்

Update: 2023-07-25 18:45 GMT

குடவாசல்:

குடவாசல் அருகே உள்ள சீதக்கமங்கலம் அபயாம்பிகை மூலநாதர் கோவில் பிரசித்தி பெற்ற மூல நட்சத்திர பரிகார தலம் ஆகும். மூல நட்சத்திரத்தில் பிறந்த திருமணம் ஆகாத ஆண், பெண்கள் இத்தலத்தில் உள்ள சாமி, அம்பாளை பசு நெய் கொண்டு திங்கட்கிழமை தோறும் 11 வாரம் விளக்கேற்றி, கடைசி வாரத்தில் பரிகார பூஜை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் மூலநாதர்- அபயாம்பிகை அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு சாமி- அம்பாளுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. இரவு 9 மணி அளவில் சிவய்யா சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் கூற மங்கள இசையுடன் மூலநாதர், அபயாம்பிகை அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது.

திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்