பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் திருக்கல்யாணம்

அழகன்குளத்தில் பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.

Update: 2022-11-01 18:45 GMT

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிராமத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 25-ம் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு பூைஜகள் நடைபெற்றன. பின்னர் நேற்று முன்தினம் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் சிதம்பரம் ஆச்சாரி லோகநாதன், ஆச்சாரி தலைவர் யோகேஸ்வரன், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் மகாதேவன் மற்றும் விஸ்வகர்மா சங்க நிர்வாகிகள், இளைஞர்கள் செய்திருந்தனர். விழா முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்