கிருஷ்ணகிரி பழையபேட்டைலட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் திருக்கல்யாணம்

Update: 2023-05-31 18:45 GMT

கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சாமி கோவில் 37-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. இந்த விழா வருகிற 8-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி தினமும் சாமிக்கு அபிஷேகம், அலங்காரம், பிரகார உற்சவம் மற்றும் பல்வேறு வாகனங்களில் நரசிம்மர் நகர் வலம் வருதல் ஆகியவை நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக நேற்று நரசிம்ம சாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.

இதில், சீர்வரிசைகளுடன், சிறப்பு யாகம் நடத்தி, வேத மந்திரங்கள் முழங்க நரசிம்மருக்கும், ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தொடர்ந்து இரவு கருட வாகனத்தில் சாமி வீதி உலா வந்தது.. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) காலை அபிஷேகமும், அலங்காரமும், இரவு யானை வாகனத்தில் நரசிம்மர் வீதி உலாவும் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்