லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

Update: 2022-11-05 18:50 GMT

சோளிங்கர்‌ லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, அமிர்தவல்லி தாயாருக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் பக்தோசித பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, அமிர்தவல்லி தாயார் திருமண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தனர். தொடர்ந்து மங்கள வாத்தியங்களுடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இதில் சோளிங்கர் மற்றும் சுற்றுப் பகுதி பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் பணம் செலுத்திய பக்தர்களுக்கு ஒரு பிரசாதமும், பணம்செலுத்தாத பக்தர்களுக்கு வேறு ஒரு பிரசாதமும் வழங்கப்பட்டதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்