ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண விழா தொடங்கியது

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-03-28 19:07 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருக்கல்யாண விழா

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம் நடைபெறும். எனவே இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோவிந்தா, கோபாலா, நாராயணா என்ற பக்தி கோஷங்கள் முழங்க கொடியேற்றம் நடபெற்றது. முன்னதாக ஆண்டாள், ெரங்க மன்னாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

விழா நாட்களில் ஆண்டாள், ரெங்கமன்னார் வீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 9-ம் நாளான வருகிற 5-ந் தேதி, பங்குனி உத்திரத்தன்று இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் ஆண்டாள், ெரங்கமன்னார் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது

அன்னதானம்

நேற்று நடந்த கொடியேற்ற விழாவில் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்