திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

Update: 2022-06-09 12:22 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை நடந்து வருகிறது.

நர்சிங் கல்லூரி

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் என்ற இளநிலை செவிலியர் பட்டப்படிப்பு 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டு சிறப்பாக நடந்து வருகிறது. இந்த படிப்பு 4 வருட பட்டப்படிப்பு ஆகும். இப்பிரிவில் வகுப்பறை பாடங்களும், செயல்முறை விளக்கங்களும் அனுபவமிக்க ஆசிரியர்களால் தரம்வாய்ந்த நவீன ஆய்வுக்கூடங்களில் கற்றுத்தரப்படுகிறது.

இங்கு அனைத்து துறைகளிலும் நவீன கட்டமைப்பு வசதிகள், காற்றோட்ட வசதியுடன் கூடிய வகுப்பறைகள், அதிநவீன ஆய்வகங்கள், மின்னணு வசதி கொண்ட மிகப்பெரிய நூலகம், இணையதள வசதி, நவீன மென்பொருள் வசதியுடன் குளிரூட்டப்பட்ட கம்ப்யூட்டர் ஆய்வகங்கள், மாணவிகள் வேலைவாய்ப்புக்காக தனி கவனம் செலுத்துதல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மாணவிகளுக்காக நவீன முறையில் கட்டப்பட்ட விடுதி, ெஜனரேட்டர் வசதி, மாணவிகளுக்கு கல்லூரி விடுதியில் இணையதள வசதி, அனுபவமிக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள் என்று அனைத்து வசதிகளும் உள்ளன.

அங்கீகாரம்

இக்கல்லூரி இந்திய நர்சிங் கவுன்சில், தமிழ்நாடு நர்சிங் கவுன்சில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்றுள்ளது. கல்லூரி மாணவிகளுக்கு தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, திருச்செந்தூர் எடிசன் மருத்துவமனை, தூத்துக்குடி ஏ.வி.எம். மருத்துவமனை, நெல்லை கிருஷ்ணா குழந்தைகள் நல மருத்துவமனை, சினேகா மனநல மருத்துவமனை ஆகிய இடங்களில் செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கிராமப்புற செய்முறை பயிற்சி ஆறுமுகநேரி, காயாெமாழி ஆரம்ப சகாதார நிலையங்களிலும், நகர்ப்புற செய்முறை பயிற்சி தூத்துக்குடி பாத்திமா நகர், தருவைநகர், திரேஸ்புரம் சுகாதார நிலையங்களிலும் பயிற்றுவிக்கப்படுகிறது. கல்லூரியின் சார்பாக சுய சமுதாய நல மையமான பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சுகாதார மையம் தொடங்கப்பட்டு, மக்களுக்கு இலவச சேவை வழங்கப்பட்டு வருகிறது.

மாணவிகள் சேர்க்கை

கல்லூரியில் மாணவிகள் தங்குவதற்கும், படிப்பதற்கும் உதவும் வகையில் விடுதி வசதி, நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு தொலைக்காட்சி அறை, படிக்கும் அறை, விளையாட்டு அரங்கம், தொலைபேசி வசதிகள், இணையதள மையம், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை அறை, மருத்துவ ஆலோசனை அறை, விசாலமான உணவக அறை, சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர், ஜெனரேட்டர் வசதிகள் உள்ளன.

இக்கல்லூரியில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாணவிகள் சேர்க்கை நடந்து வருகிறது. விண்ணப்ப படிவத்தை www.drsacon.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கலாம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9994909422, 04639-220608, 220607 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்