ரூ.4 கோடியே 79½ லட்சத்தில் 30 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது

ஆடுதுறை பேரூராட்சியில், ஓராண்டில் ரூ.4 கோடியே 79½ லட்சத்தில் 30 பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக தலைவர் கூறினார்.

Update: 2023-04-07 20:32 GMT

திருவிடைமருதூர்;

ஆடுதுறை பேரூராட்சியில், ஓராண்டில் ரூ.4 கோடியே 79½ லட்சத்தில் 30 பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக தலைவர் கூறினார்.

ரூ.4 கோடியே 79½ லட்சத்தில் பணிகள்

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளின் உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளாக பொறுப்பேற்று ஓராண்டு முடிவடைந்துள்ளது. கடந்த ஓராண்டில் ஆடுதுறை பேரூராட்சிக்குட்பட்ட 15 வட்டங்களிலும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட 30 பணிகள் ரூ.4 கோடியே 79 லட்சத்து 58 ஆயிரத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் தெரிவித்தார்.ஓராண்டு நிறைவை கொண்டாடும் வகையில் நடந்து முடிந்த பணிகள் குறித்த விளம்பர பதாகைகள் ஆடுதுறை பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம்

முன்னதாக ஆடுதுறை பஸ் நிலைய வளாகத்தில் புதிதாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தலைவர் ம.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை தலைவர் கமலா சேகர், செயல் அலுவலர் ராம்பிரசாத் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஓராண்டு சாதனையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்