திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்

சிவகிரி திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-06-06 12:21 GMT

சிவகிரி:

சிவகிரி திரவுபதி அம்மன் கோவிலில் வைகாசி மாதம் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு கோவிலில் உள்ள மூலவர் உள்பட அனைத்து சாமிகளுக்கும் சந்தனம், பன்னீர், பால், தயிர் இளநீர் போன்ற 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 6 மணி அளவில் கோவிலில் இருந்து கொடி பட்டத்திற்கு பூஜைகள் நடத்தப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தது. காலை 7 மணிக்கு கொடிமரத்திற்கு பூஜைகள் நடத்தப்பட்டு, 7.15 மணி மணிக்கு கோவில் பூசாரி மாரிமுத்து தலைமையில், இலஞ்சி குமாரர் கோவில் அர்ச்சகர் கணேச கனவாடிகன் மற்றும் சுந்தர் பட்டர் என்ற ரமேஷ் ஆகியோர் கொடியேற்றினர். தொடர்ந்து விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 15-ந் தேதி வரை நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாள் விழாவும் ஒவ்வொரு சமூகத்தினரால் நடத்தப்படுகிறது.

வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி அளவில் திரவுபதி அம்மன் கோவில் முன்பாக உள்ள பூக்குழி திடலில் பூக்குழி நடக்கிறது. அன்றைய தினம் விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்குகிறார்கள். ஏற்பாடுகளை காப்பு கட்டும் பக்தர்கள் சங்கத்தின் சார்பாக தலைவர் தனுஷ்கோடி, செயலாளர் மாரியப்பன், பொருளாளர் பாண்டியராஜன் மற்றும் அனைத்து காப்பு கட்டிய பக்தர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்