திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி திருவிழா
அய்யம்பேட்டை திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி திருவிழா நடந்தது
அய்யம்பேட்டை பெரிய தைக்கால் தெருவில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தீமிதி திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் இரவு மகாபாரத சொற்பொழிவு நடந்தது. நேற்று காலை கூந்தல் முடிதல் நாடகம் நடைபெற்றது. மாலை கோவில் அருகில் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்தபடி தீ மிதித்தனர். இரவு அம்பாள் அன்ன வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.