திம்பம் மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் மினி லாரி கவிழ்ந்தது டிரைவர் உயிர் தப்பினார்

டிரைவர் உயிர் தப்பினார்

Update: 2022-09-24 19:30 GMT

திம்பம் மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் மினி லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

திம்பம் மலைப்பாதை

தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினமும் கார், பஸ், லாரி, வேன், சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. தமிழக-கர்நாடக மாநிலங்கள் இடையே முக்கிய போக்குவரத்தாக திம்பம் மலைப்பாதை உள்ளது. குறுகிய வளைவுகளை கொண்டதால் வாகனங்கள் நிலைதடுமாறி கவிழ்வதும், அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் பழுதாகி நின்று விடுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.

மினி லாரி கவிழ்ந்தது

இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து நாமக்கல் மாவட்டத்துக்கு நேற்று மாலை மினி லாரி சென்று கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதை 27-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து 100 அடி கிடுகிடு பள்ளத்தில் மினி லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் டிரைவரை மீட்டனர். இதுகுறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்