திம்பம் மலைப்பாதையில் உலா வந்த ஒற்றை யானை - வாகன ஓட்டிகள் பீதி
திம்பம் மலைப்பாதை 10 வது கொண்டை ஊசி வளைவில் ஒற்றை யானை ஒன்று உலா வந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. தமிழகம் கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ளது.
இந்நிலையில் இன்று மாலை திம்பம் மலைப்பாதை 10 வது கொண்டை ஊசி வளைவில் ஒற்றை யானை ஒன்று உலா வந்தது. அவ்வழியாக கரும்பு லாரிகள் வருகின்றவா என எதிர்பார்த்து சுற்றி திரிந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.