திருத்தணி திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
திருத்தணி திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் அமைந்துள்ள புராதன திரவுபதி அம்மன் கோவிலில், நேற்று காலை 4.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா வெகுவிமரிசையாக தொடங்கியது.
இதை தொடர்ந்து கணபதி, நவகிரக ஹோமம், கோ பூஜை, யாகசாலை பூஜைகள் நடந்தது. பின் காலை 8 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தினமும் காலையில் மூலவர் அம்மனுக்கு சந்தன காப்பு மற்றும் சிறப்பு தீபாராதனையும், தினமும் மதியம், 1.30 மணி முதல் மாலை, 5.30 மணி வரை மகாபாரத தொடர் சொற்பொழிவும் நடக்க உள்ளது. வருகின்ற 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை துரியோதனன் படுகளமும், மாலை 6 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்.