உடுமலையில் சைக்கிள் திருடன் உலா

Update: 2023-01-07 17:02 GMT


உடுமலை பகுதியில் கடந்த சில நாட்களாக விலை உயர்ந்த சைக்கிள்கள் குறி வைத்து திருடப்படுவதாக புகார்கள் எழுந்தது. இந்தநிலையில் உடுமலை கல்பனா சாலையில் உள்ள நேதாஜி மைதானத்தில் நிறுத்தியிருந்த சைக்கிளை மர்ம ஆசாமி ஒருவர் திருடிச் செல்லும் காட்சி கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. மாணவர்கள் தங்கள் சைக்கிள்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு எச்சரிக்கை வாசகத்துடன் தற்போது இந்தகண்காணிப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்