"மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தி விட்டு திராவிட ஆட்சி என கூறுகிறார்கள்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தி விட்டு திராவிட ஆட்சி என கூறுகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2022-09-06 10:26 GMT

சென்னை,

சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது தாலிக்கு தங்கம் திட்டம் தொடங்கப்பட்டது, தாலிக்கு தங்கம் திட்டத்தின் மூலம் 7000 கோடி மதிப்பில் 7 டன் தங்கம் 4 லட்சம் பெண்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் பயனடைந்துள்ளனர்.

தற்போது அதை புதுமைப்பெண் திட்டம் என்று மாற்றம் செய்து தாலிக்கு தங்கம் வழங்குவதற்கு பதிலாக கல்லூரி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது. யானைப் பசிக்கு சோளப்பொறி போல இந்த திட்டம் உள்ளது.

தற்போது திராவிட மாடல் என்ற போர்வையில் திராவிடம் என்கிற அருமையான பெயரை திமுகவினர் குட்டி சுவராக்கி வருகிறார்கள். எல்லா வகையிலும் மக்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தி விட்டு திராவிட ஆட்சி என கூறுகிறார்கள்

இந்த ஆட்சியில் மோசமான துறை பள்ளிக்கல்வி துறை தான். பள்ளிக்கல்வித்துறையில் மகேஷ் பொய்யாமொழி பெயில் மார்க் வாங்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்றங்களை கவனித்துக் கொள்வதுதான் அமைச்சர் அன்பில் மகேஸ்-க்கு ஏற்ற துறையாக இருக்கும் என்று ஜெயக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்