வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு

நெமிலி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-09-16 15:27 GMT

நெமிலி

நெமிலியை அடுத்த காட்டுப்பாக்கம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் கீதா (வயது 51). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இவரின் மூத்த மகன் ராம்கி சென்னையில் தங்கி வக்கீல் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் கீதா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னையில் உள்ள ராம்கி வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் இன்று காலை வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்பு உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.

அதிலிருந்து சுமார் 10 பவுன் நகை, ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

.இதுகுறித்து பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகை, பணம் எவ்வாறு திருடப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்