ஆசிரியை வீட்டு கதவை உடைத்து வெள்ளி பொருட்கள், வைரமூக்குத்தி திருட்டு

கொட்டாம்பட்டி அருகே ஆசிரியை வீட்டு கதவை உடைத்து வெள்ளி பொருட்கள், வைரமூக்குத்தி திருட்டு நடைபெற்றது.

Update: 2022-10-10 21:01 GMT

கொட்டாம்பட்டி, 

.கொட்டாம்பட்டி அருகே உள்ள கருங்காலக்குடி பூஞ்சோலை நகரை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி பாரதி (வயது 32). 2 குழந்தைகள் உள்ளனர். தற்சமயம் முருகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பாரதி அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். பாரதி தனது குழந்தைகளுடன் இரவு நேரத்தில் அருகே உள்ள தாய் வீட்டில் தங்குவது வழக்கம். நேற்று முன்தினம் வழக்கம் போல் தாய் வீட்டில் தங்கி விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 4 வெள்ளி கொலுசுகள், 2 வெள்ளி அரையாண்கொடி, 4 வெள்ளி மோதிரம், ஒரு வைரமூக்குத்தி ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். நேற்று அதிகாலை அக்கம், பக்கத்து வீட்டுகாரர்கள் வீடு திறந்து கிடப்பதாக பாரதிக்கு தகவல் கொடுத்துள்ளனர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டு இருந்த வெள்ளி பொருட்கள், வைரமூக்குத்தி திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்திபாலாஜி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்