ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது மின்தடை ஏற்படும்

ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது மின்தடை ஏற்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-11 18:44 GMT

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சாமிதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

அரியலூர் துணை மின் நிலையத்தில் உள்ள ஒரு மின்மாற்றி பழுது ஏற்பட்டுள்ள காரணத்தினால், நடுவலூர் துணை மின் நிலையத்திற்கு செல்ல வேண்டிய மின்னோட்டமானது தடைபட்டுள்ளது. எனவே நடுவலூர் துணை மின் நிலையத்திற்கு, ெஜயங்கொண்டம் துணை மின் நிலையத்தில் இருந்து, அவசர சூழ்நிலை கருதி மின்னோட்டம் அளிக்கப்படுகிறது.

இதன் காரணமாக நடுவலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தத்தனூர், வெண்மான்கொன்டான், சுத்தமல்லி, கோட்டியால், காசாங்கொட்டை, முட்டுவாஞ்சேரி பகுதிகளுக்கும், உடையார்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட டி.மேலூர், த.பொட்டக்கொல்லை, கீழவெளி, பரணம், இடையார், உடையார்பாளையம் பகுதிகளுக்கும் மற்றும் தா.பழூர் மின் நிலையத்திற்கு உட்பட்ட ஏ.என்.பேட்டை, டி.கே.பி.நத்தம், தா.பழூர், இடங்கண்ணி மற்றும் சோழமாதேவி, வாழைக்குறிச்சி, ஸ்ரீபுரந்தான், அணைக்குடம் நீர்நிலையங்கள் போன்ற பகுதிகளுக்கும் மின்பளுவுக்கு ஏற்றவாறு அவ்வப்போது அவசர சூழ்நிலை கருதி மின்தடை ஏற்படும். மேலும் அரியலூர் துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியின் பழுது சரிசெய்து முடிக்கும்வரை மேற்படி பகுதிகளுக்கு மின்பளுவுக்கு ஏற்றவாறு அவ்வப்போது அவசர சூழ்நிலை கருதி மின்தடை ஏற்படும்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்