ரிசர்வ் வங்கி நிதி கொள்கை குழு கூட்டத்தில் வட்டி விகித மாற்றம் இருக்காது
ரிசர்வ் வங்கி நிதி கொள்கை குழு கூட்டத்தில் வட்டி விகித மாற்றம் இருக்காது என நிபுணர் கருத்து தெரிவித்துள்ளாா்.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும் நிலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டத்தில் 6.25 சதவீத வங்கி வட்டி விகிதத்தை மாற்ற வாய்ப்பில்லை என பொருளியல் நிபுணர் தெரிவித்தார்.
பணவீக்கம்
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
பணவீக்கம் கட்டுக்குள் வருவதன் விளைவாக வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது என கூறப்படுகிறது. சில்லறை பண வீக்கத்தை 2 முதல் 6 சதவீத வரம்பில் வைத்திருக்க வேண்டும் என்ற ரிசர்வ் வங்கி தீர்மானத்திருக்கும் நிலையில் தற்போதைய நிலையில் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது. தற்போதைய 6.25 சதவீத வட்டி விகிதத்தில் வங்கிகளின் வணிகம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும் உடனடி வட்டி விகித குறைப்பை யாரும் எதிர்பார்க்காத நிலையே உள்ளது. மேலும் வங்கிகளின் வருமானச் சந்தை மேம்பாடு மற்றும் ரூ.2 ஆயிரம் டெபாசிட் ஆகியவற்றின்காரணமாக பணப்புழக்கம் அதிகரித்து உள்ள நிலையில் ரிசர்வ் வங்கி மென்மையான வட்டி விகிதங்களை மேற்கொள்ளவே வாய்ப்புள்ளது.
வட்டி விகிதம்
எனவே இன்று நடைபெறும் கூட்டத்தில் வட்டி விகிதம் தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் நடப்பு வட்டி விகிதத்தை தொடர முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நிதி கொள்கை குழு கூட்டத்தில் மே மாதம் பண வீக்கத்தை குறைக்கும் நோக்கில் வட்டி விகித உயர்வை அறிவித்த பிறகு முதல் முறையாக வட்டி விகிதத்தை மாற்றாமல் இந்த கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஏப்ரல் மாதம் நடந்த கூட்டத்திற்கு பிறகு சில்லறை விலை உயர்வு 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு 4.7 சதவீதமாக குறைந்துள்ளது. எனவே தற்போதைய நிலையில் வங்கி வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் இருக்காது என்பதை உறுதியாக எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.