நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு

Update: 2023-08-31 18:45 GMT


மயிலாடுதுறை மின்வாரிய இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற்பொறியாளர் சந்தானகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குத்தாலம், பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான பாலையூர், தேரழுந்தூர், கோமல், மருத்தூர், மாந்தை, வடமட்டம், கோனேரிராஜபுரம், கோடிமங்கலம், பழையகூடலூர், கொக்கூர், பேராவூர், கரைகண்டம், கருப்பூர், திருவாலங்காடு, திருவாவடுதுறை, குத்தாலம் டவுன், சேத்திரபாலபுரம், மாதிரிமங்கலம், அரையபுரம் ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இதேபோல் சீர்காழி செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் ஆச்சாள்புரம், அரசூர், எடமணல் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் சீர்காழி நகரம் முழுவதும், வைத்தீஸ்வரன் கோவில், ஆச்சாள்புரம், எடமணல், கொள்ளிடம், புத்தூர், கொண்டல், பழையார், பழையபாளையம், திருமுல்லைவாசல், திட்டை, தில்லைவிடங்கன், தென்பாதி மற்றும் அதை சார்ந்த பகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்