ரேஷன்கார்டை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்தவர்களால் பரபரப்பு

ரேஷன்கார்டை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-05 18:45 GMT

திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பூசணிக்குளம் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன், சொக்கலிங்கம், சேவுகன், குமார், சொக்கலிங்கம், முருகேசன், பாலதண்டாயுதம் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கலெக்டர் இல்லாததால் அலுவலக வளாகத்தில் காத்திருந்தனர். இதுகுறித்து அறிந்த தாசில்தார் பாலகுரு அங்கு சென்று அவர்களிடம் விசாரித்தார். அப்போது அவர்கள் கூறுகையில், தங்கள் 7 குடும்பத்தை சேர்ந்தவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது மற்ற மாணவர்கள் பேசுவதுமில்லை என்றும், இதுகுறித்து போலீசார், வருவாய்த்துறையிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை, எனவே, ஊரில் தொடர்ந்து வாழ முடியாத நிலையில் உள்ளதால் தங்கள் ரேஷன்கார்டை கலெக்டரிடம் ஒப்படைத்து விட்டு ஊரை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக கூறினர். அவர்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அவர்கள் கலெக்டரை சந்தித்துவிட்டுதான் செல்வோம் என்று கூறி காத்திருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்