எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு

எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-08 20:51 GMT

ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினார். அப்போது, மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் கட்டியிருந்த கொடி மற்றும் வரவேற்பு பேனர்களை அகற்றக்கோரி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் டவுன் போலீசில் புகார் செய்தனர். இதனிடையே, எடப்பாடியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க சென்ற பெங்களூரு புகழேந்தியின் காரை எடப்பாடி பழனிசாமியின் தரப்பினர் வழிமறித்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூருபுகழேந்தியை சிலர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார்.

இந்நிலையில், எடப்பாடியில் பெங்களூரு புகழேந்தியை தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்தும், எடப்பாடி பழனிசாமி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரியும் சேலம் மாநகர் பகுதியில் நேற்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டியால் அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்