கம்பத்தில் முட்புதரில் கிடந்த சாக்கு மூட்டையால் பரபரப்பு

கம்பத்தில் முட்புதரில் கிடந்த சாக்கு மூட்டையால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-12 21:00 GMT

கம்பம் காட்டுப்பள்ளி வாசல் செல்லும் சாலையில் முட்புதரில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது. மேலும் அதில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக கம்பம் பகுதியில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் பரவியது.

இதனையடுத்து கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சாக்கு மூட்டையை அவிழ்த்து பார்த்தனர். அப்போது அதில் நாயின் உடல் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்களும், போலீசாரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவம் கம்பத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்