கிழவிப்பட்டி பகுதியில் வியாழக்கிழமை மின்தடை

கிழவிப்பட்டி பகுதியில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும்.

Update: 2022-08-23 10:34 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், விஜயாபுரி உபமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் கெச்சிலாபுரம், மந்தித்தோப்பு மின் தொடரை இரண்டாக பிரித்து 11 கி.வோ மின் தொடராக பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் நாளையும் (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கிழவிபட்டி, கெச்சிலாபுரம் பகுதிகளுக்கு மின்சார விநியோகம் இருக்காது, என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்