புதுக்கோட்டை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது விஷம் குடித்த வாலிபரால் பரபரப்பு

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட வழக்கில் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது விஷம் குடித்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-08 18:32 GMT

பாலியல் வன்கொடுமை

புதுக்கோட்டை மாவட்டம், கீழத்தானியம் மூரானம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 32). இவர், கடந்த ஆண்டு ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பின்னர் இது சம்பந்தமாக புதுக்கோட்டை கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கின் இடையில் ஆறுமுகம் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அவ்வப்போது கோர்ட்டில் ஆஜராகி வந்தார்.

தற்கொலை முயற்சி

இந்த வழக்கு தொடர்பாக நேற்று புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் ஆறுமுகம் மற்றும் மருத்துவரிடம் விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது கோர்ட்டுக்கு வந்திருந்த ஆறுமுகம் திடீரென்று தான் கையில் வைத்திருந்த விவசாய தோட்டத்திற்கு அடிக்க பயன்படுத்தும் குருணை மருந்தை (விஷம்) எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரது கையில் வைத்திருந்த மருந்தை பறித்தனர். பின்னர் போலீசார் ஆறுமுகத்தை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தீர்ப்புக்கு பயந்து ஆறுமுகம் இந்த முடிவு எடுத்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரபரப்பு

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் ஒருவர் ஜாமீனில் வெளியே வந்து விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜரான போது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோர்ட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்