அதிகாலையில் புகுந்த கரடியால் பரபரப்பு

எமரால்டு பஜாரில் அதிகாலையில் புகுந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டு தோட்ட தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

Update: 2023-04-07 18:45 GMT

மஞ்சூர்

எமரால்டு பஜாரில் அதிகாலையில் புகுந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டு தோட்ட தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

கரடி நடமாட்டம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர், ஓவேலி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகள் 65 சதவீதத்திற்கும் அதிகமாக வனப்பகுதிகளை கொண்டு உள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் அதிக அளவில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் பகுதிகளில் கரடி, சிறுத்தை நடமாட்டமும், கூடலூர் பகுதியில் காட்டு யானை நடமாட்டமும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு கரடி எமரால்டு பஜார் பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றி திரிகிறது. நேற்று முன் தினம் அதிகாலை நேரத்தில் பஜார் பகுதியில் ஒரு கரடி புகுந்து சாவகாசமாக சுற்றித்திரிந்தது. அதிகாலை நேரம் என்பதால் வேலைக்கு வந்த தோட்ட தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தது

இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

கடந்த டிசம்பர் மாதம் முதல் எமரால்டு பகுதியில் இந்த கரடி சுற்றித்திரிந்து வருகிறது. குறிப்பாக எமரால்டு போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து மீண்டும் வெளியே வருகிறது. அதன் பின்னர் அந்த கரடி ஒரு சில நாட்கள் எங்கு சென்றது என்று தெரியவில்லை. ஆனால் தற்போது மீண்டும் வந்து பஜார் பகுதியில் சுற்றித்திரிகிறது. இதனால் தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மஞ்சூர் பகுதியில் பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த கரடி கூண்டு வைத்து பிடிக்கப்பட்டு மாவனல்லா வனப்பகுதியில் விடப்பட்டது. அதேபோல் இந்த கரடியையும் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இரவு நேரத்தில் பஜார் பகுதியில் இருந்து வெளியேறிய கரடி எந்த பக்கம் சென்றது என்று தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்