இளம்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

இளம்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

Update: 2022-10-08 18:45 GMT

மயிலாடுதுறை அருகே மேலமருதாந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அந்துவான். இவரது மனைவி காயத்ரி (வயது 33). அதே பகுதியில் வசிக்கும் தனது தந்தை கிருஷ்ணசாமி வீட்டிற்கு சென்றிருந்த குழந்தையை அழைக்க காயத்ரி கடந்த 4-ந் தேதி சென்றுள்ளார். அப்போது கிருஷ்ணசாமி வீட்டின் அருகில் வசிக்கும் உறவினரான சிவசுப்பிரமணியன் மனைவி ராமலட்சுமி என்பவர் முன்விரோதம் காரணமாக தகாத வார்த்தைகளால் அவரை திட்டியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட காயத்ரிக்கும், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காயத்ரி மணல்மேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் ராமலட்சுமியின் மகன்கள் ஹரி ராஜதுரை, நவீன் ராஜதுரை ஆகிய 2 பேரும் தன்னை தாக்கி, மானபங்கப்படுத்தினர் என கூறியிருந்தார். இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று காயத்ரி மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தன் மீது டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் காயத்ரியை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் விசாரணைக்காக அவர் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்