இலவச வீட்டு மனை கேட்டு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
இலவச வீட்டுமனை கேட்டு கிணத்துக்கடவு தாலுகா அலுவல கத்தில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரி உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.
கிணத்துக்கடவு
இலவச வீட்டுமனை கேட்டு கிணத்துக்கடவு தாலுகா அலுவல கத்தில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரி உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.
பொதுமக்கள் திரண்டனர்
கிணத்துக்கடவு அருகே செட்டியக்கபாளையம், பட்டணம், நல்லட்டிபாளையம், முள்ளுப்பாடி, இம்மிடிபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கிணத்துக்கடவு பஸ் நிறுத்தம் அருகே திரண்டனர். அவர்கள் திடீரென்று வருவாய் துறையின ரை கண்டித்து கோஷமிட்டனர்.
உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் உங்களது குறைகளை தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறையினரிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினர். அதை ஏற்று பொதுமக்கள் கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர்.
இலவச வீட்டுமனை
அங்கு ஜமாபந்தி நடைபெற்றதால் பொதுமக்கள் திரண்டு வந்ததும் தாலுகா அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், செந்தில்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்களிடம் கிணத்துக்கடவு தாசில்தார் சிவகுமார் பேசும் போது,
இலவச வீட்டு மனை வழங்குவது குறித்து விசாரணை நடத்தி இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அது முடிந்ததும் முன்னுரிமை அடிப்படையில் இலவச வீட்டு மனை வழங்கப்படும் என்றார்.
உரிய நடவடிக்கை
அவரிடம் பொதுமக்கள் கூறுகையில், பட்டணம் பகுதியில் இலவச வீட்டு மனை கொடுத்த இடத்தில் பலர் வீடு கட்ட வில்லை. அங்கு எங்களுக்கு நிலத்தை வழங்க வேண்டும். 8 ஆண்டு களாக மனு கொடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை.
நல்லட்டிபாளையம், தேவணாம்பாளையம் உள்ளிட்ட இடங்க ளில் நிலம் உள்ளது. அதை ஆய்வு செய்து எங்களுக்கு இடம் தர வேண்டும் என்றனர்.
இதையடுத்து பொதுமக்கள் மாவட்ட வருவாய் அதிகாரி லீலாஅலெக்சை சந்தித்து தங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர்.
அதை கேட்ட மாவட்ட வருவாய் அலுவலர் லீலாஅலெக்ஸ், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடம் குறித்து விவரங்களை வரு வாய் துறையினரிடம் கேட்டறிந்து ஆவணங்களை பார்வையிட் டார்.
அதை ஆய்வு செய்து நாளை (வியாழக்கிழமை) உரிய நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார். அதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.