நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது

நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் அரசிய் தலையீடு இருக்கக்கூடாது என்று குறைதீர்வு கூட்ட்டத்தில் விவசாயிகள் கோவிக்கை விடுத்தனர்.

Update: 2022-10-28 18:25 GMT

நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் அரசிய் தலையீடு இருக்கக்கூடாது என்று குறைதீர்வு கூட்ட்டத்தில் விவசாயிகள் கோவிக்கை விடுத்தனர்.

குறைதீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு பேசினர். அப்போது பல்வேறு இடங்களில் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். அதற்கு நீர்நிலை ஆக்கிரமிப்புகள் பாகுபாடு இன்றி அகற்றப்பட்டு, இடங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது, தொடர்ந்து ஆ௳்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகவே இதில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை.‌ இது போன்ற பிரச்சினைகளை விவசாயிகள் மனுக்களாக வழங்கலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய விவசாயிகள் சாத்தூர் கிராமத்தில் 358 ஏக்கர் வனத்துறை நிலத்தின் சில பகுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். சீக்கராஜபுரம், வடகால் பொன்னை ஆற்றுக்கால்வாயில் ஆக்கிரம்புகள் உள்ளதால் கடந்த 2 ஆண்டுகளாக பொன்னையாற்றில் தண்ணீர் சென்றும், வடகால் ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் இதுவரையில் ஆழ்துளை போடப்பட்டு பல விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

அரசியல் தலையீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் எதிர்வரும் சம்பா பருவத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் எவ்வித அரசியல் தலையிடும் இல்லாமல் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் விளை பொருட்களை நாசமாக்குகிறது. காட்டுப் பன்றிகளை சுட அரசு உத்தரவிட்டும், வனத்துறை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என்றனர்.

அதற்கு பதில் அளித்த வனத்துறை அதிகாரி முறையான வழிகாட்டுதல் இல்லாததால் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளது. அதேசமயம் இப்பிரச்சினைக்கு தீர்வாக விளை நிலங்கள் ஓரம் தடுப்பு வேலிகள் அமைப்பதற்கான அரசின் திட்டம் உள்ளது இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

இதற்கு பதிலளித்த கலெக்டர் எந்த வருவாய் கிராமங்களில் அதிக அளவில் நெல் கொள்முதல் ஆகின்றது என்பதை கண்காணித்து, அந்த இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் நெல் குடோன்கள் அமைக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

விழிப்புணர்வு பிரசார வாகனம்

பின்னர் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில், சிறப்பு ராபி பருவம் 2022-23 பயிர் காப்பீடு செய்வது குறித்து விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் 7 வட்டாரங்களில் அடுத்த இரண்டு வாரத்திற்கு ஒவ்வொரு கிராமங்களுக்கு சென்று பயிர் காப்பீடு செய்து கொடுத்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், வேளாண்மை இணை இயக்குனர் விஸ்வநாதன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவணன், துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்