"கவர்னர்-முதல்-அமைச்சர் இடையே சுமூகமான உறவு இருக்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்

கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் இருவருக்கும் இடையே ஈகோ இருக்க கூடாது என பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-03 08:31 GMT

சேலம்,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது நிலுவையில் உள்ள மசோதாக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கவர்னரிடம் முதல்-அமைச்சர் வலியுறுத்தியதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ், கவர்னர்-முதல்-அமைச்சர் இடையே சுமூகமான உறவு இருக்க வேண்டும் என்றும் அப்போது தான் நிர்வாகம் சீராக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது;-

"கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் இருவருக்கும் இடையே ஈகோ இருக்க கூடாது. மேலும் இருவரும் அரசியல் செய்யக்கூடாது. ஏனென்றால் இதனால் பாதிக்கப்படுவது தமிழ்நாட்டு மக்கள் தான்.

தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு தாமதம் இல்லாமல் உடனடியாக தீர்வு காண்பது கவர்னரின் கடமை. நிச்சயமாக அவர் அதை செய்ய வேண்டும். முதல்-அமைச்சர் மற்றும் கவர்னர் இடையே மோதல் போக்கு இருக்க கூடாது."

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்