மஞ்சபுத்தூர் ஏரியில் தண்ணீர் இருக்கு... பாசனத்துக்கு பயன்படுத்த முடியலையே...

மஞ்சபுத்தூர் ஏரியில் தண்ணீர் இருக்கு... பாசனத்துக்கு பயன்படுத்த முடியலையே... என்று விவசாயிகள் புலம்புகிறாா்கள்.

Update: 2023-04-18 19:00 GMT

சங்கராபுரம்:

சங்கராபுரம் அருகே உள்ள மஞ்சபுத்தூர் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 280 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் 500 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. ஏரியின் பெரிய மதகு 4 ஆண்டுகளுக்கு முன்பு பழுதானது. அதன்பிறகு மதகை திறக்க முடியாததால் ஏரியில் தண்ணீர் இருந்தும் விவசாய பாசனத்திற்கு பயன்படுத்த முடியாமல் உள்ளது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் பலமுறை மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மதகை உடனே சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்