நோட்டு, புத்தகங்களின் விலையில் மாற்றம் ஏதும் இல்லை

நடப்பு கல்வி ஆண்டில் நோட்டு, புத்தகங்களின் விலையில் மாற்றம் ஏதும் இல்லை என நோட்டு, புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

Update: 2023-06-08 19:25 GMT


நடப்பு கல்வி ஆண்டில் நோட்டு, புத்தகங்களின் விலையில் மாற்றம் ஏதும் இல்லை என நோட்டு, புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

பள்ளிகள் திறப்பு

நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் கடந்த ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவ- மாணவிகளின் நலன் கருதி பள்ளிகள் வருகிற 12-ந் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பள்ளி திறக்கும் தேதியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

நோட்டு, புத்தகங்கள்

பள்ளிக்கல்வித்துறை மாணவ-மாணவிகளுக்கு தேவையான இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கினாலும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளும் தங்களுக்கு தேவையான நோட்டு, புத்தகங்களையும், துணை நூல் புத்தகங்களையும் வாங்க வேண்டிய நிலையில் கடந்த ஒரு வாரமாகவே புத்தக விற்பனை நிலையங்களில் மாணவ-மாணவிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது.

நோட்டு, புத்தகங்களின் விலை குறித்து விற்பனையாளர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

நோட்டு. புத்தகங்களின் விலை கடந்த ஆண்டில் இருந்த விலையில் தான் உள்ளது.

விலையில் மாற்றம் இல்லை

அதிலும் 2-வது தர நோட்டு, புத்தகங்களின் விலை சற்று குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 10 சதவீதம் வரை இருந்த விலையை விட குறைந்துள்ளது. மேலும் தேவைக்கேற்ப கிடைக்கும் நிலையும் உள்ளது. துணைநூல்களை பொறுத்தமட்டில் பதிப்பாளர்கள் கடந்த ஆண்டு நிர்ணயித்த விலையில் தான் தற்போதும் வினியோகித்து வருகின்றனர். துணை நூல்களின் விலையிலும் எந்த மாற்றமும் இல்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்