வரும் 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை - வைத்திலிங்கம் பேட்டி

வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-03 07:08 GMT

சென்னை,

அ.தி.மு.க.வை வழிநடத்த ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்ற விவாதம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இது தொடர்பாக கடந்த 23-ந் தேதி பொதுக்குழு கூட்டம் களேபரமாக நடந்து முடிந்தது. தற்போது இரு அணிகளாக கட்சி செயல்பட்டு வருகிறது.

இதனையடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு,பொதுக்குழு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில்,பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

"பொதுக்குழுவுக்கான அழைப்பிதழ் அனுப்பி அனைத்து ஏற்பாடுகள் செய்தாலும், வரும்11-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை.

தலைமைக் கழகம் அழைப்பு என்ற பெயரில் அழைப்பிதழ் அனுப்புவது ஏற்புடையதல்ல. அதிமுக பொருளாளரான ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதலின்றி கூட்டப்படும் பொதுக்குழு செல்லாது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்