கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-01 19:14 GMT

கறம்பக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட தட்டாவூரணி பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன்மூலம் அப்பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிநீர் வசதி பெற்று வருகின்றனர். இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ள இடம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சின்னையா என்பவருக்கும், பொதுமக்களுக்கும் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் தட்டாவூரணி பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு கறம்பக்குடி போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்து தாங்கள் பயன்படுத்தும் குடிநீரில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீரில் கலப்படம் என கூறி போலீஸ் நிலையத்திற்கு பொதுமக்கள் திரண்டு வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்