பஸ் நிலையத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு
பஸ் நிலையத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள அகரம்சீகூர் பகுதியில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் அகரம்சீகூர் பஸ் நிலையத்தில் அரியலூர் செல்லும் சாலையில் திடீரென மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனைக்கண்ட பொதுமக்கள் மின்கம்பியின் அருகே யாரும் வராத வகையில் எச்சரிக்கை செய்ததால், விபரீதம் ஏற்படல்லை. இது குறித்து தகவல் அறிந்து வந்த லெப்பைக்குடிக்காடு மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின் வினியோகத்தை நிறுத்தினர். பின்னர் மின்கம்பிகளை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.