மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைமுறையில் மாற்றம்
மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை
மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-
ராணிப்பேட்டை மாவட்டத்தினை சார்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு, மாதத்தின் முதல் வாரம் செவ்வாய்கிழமைகளில் மட்டும் தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் இனிவரும் காலங்களில் நடைபெறும்.
தேசிய அடையாள அட்டை பெறும் மருத்துவ முகாமில் பங்கேற்கும் மாற்றுத் திறனாளிகள் 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ரேஷன் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல்ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பழைய அடையாள அட்டை புத்தகம் தவற விடப்பட்டிருப்பின் புதிதாக பெற வேண்டுமெனில் போலீசாரின் முதல் தகவல் அறிக்கை நகல் ெகாண்டு வந்து பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டிருந்தது.