ரெயில்வே துறையில் 2½ லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்
ரெயில்வே துறையில் 2½ லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று எஸ்.ஆர்.எம்.யு. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருத்தாசலம்:
விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் எஸ்.ஆர்.எம்.யு. விருத்தாசலம் கிளை சிறப்பு கூட்டம் நடந்தது. இதற்கு திருச்சி கோட்ட செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் கணேஷ்குமார் முன்னிலை வகித்தார். மண்டல தலைவர் ராஜா ஸ்ரீதர் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக கிளை தலைவர் செல்வம் வரவேற்றார். இதில் ரெயில்வே ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ரெயில்வே துறையில் 2 லட்சத்து 50 ஆயிரம் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ரெயில்வே துறை தனியார் மயம் ஆவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பொருளாளர் வீரக்குமார் நன்றி கூறினார்.