பெரம்பலூரில் இன்று 176 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள்

பெரம்பலூரில் 176 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் இன்று நடக்கிறது.

Update: 2022-09-24 19:01 GMT

தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 38-வது சிறப்பு முகாம்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இம்முகாம்களில் 9 ஆயிரத்து 220 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 29 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவமனைகள், 143 மற்ற இடங்கள் என மொத்தம் 176 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு இரண்டாம் தவணைக்கு உள்ளவர்களும், 2 தவணை முடிந்து முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் செலுத்தி கொள்ளலாம் என்று மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்