ஈருடையாம்பட்டுபுனிதவிண்ணரசி ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி

ஈருடையாம்பட்டு புனிதவிண்ணரசி ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது.

Update: 2023-05-21 18:45 GMT


மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைபட்டு அருகே உள்ள ஈருடையாம்பட்டில் பிரசித்தி பெற்ற புனித விண்ணரசி அன்னை ஆலயம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு ஆலய பெருவிழா நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காலை, மாலை என இரு நேரங்களில் சிறப்பு கூட்டு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது.

தேர்பவனி

விழாவில் நேற்று முன்தினம் ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி, ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் குழந்தை ஏசு, விண்ணரசிமாதா, ஆரோக்கியமாதா, புனித சூசையப்பர், புனித அடைக்கலை மாதா, புனித அந்தோனியார், புனித கார்மேல் மாதா, புனித அருளானந்தர் உள்ளிட்ட சொரூபங்கள் வைக்கப்பட்டது. தொடர்ந்து, தேர்கள் ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழீயாக வந்து மீண்டும் ஆலயத்தைவந்தடைந்தது.

இதில் மூங்கில்துறைப்பட்டு, சவேரியார் பாளையம், அந்தோணியார்புரம், அருளம்பாடி, அரும்பரம்பட்டு, சீர்வாதநல்லூர், கானாங்காடு, மங்கலம்உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இறை மக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆலயம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை ஊர் காரியக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்