விருத்தாசலம்பாத்திமா அன்னை ஆலய தேர் பவனிதிரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

விருத்தாசலம் பாத்திமா அன்னை ஆலய தேர் பவனி நடைபெற்றது

Update: 2023-05-14 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலத்தில் புகழ்பெற்ற தூய பாத்திமா அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 49-ம் ஆண்டு பெருவிழா கடந்த 5-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சிறிய தேர்பவனி மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதையொட்டி காலை புதுவை கடலூர் உயர் மறை மாவட்ட பிரான்சிஸ் கலிஸ்ட் கலந்து கொண்டு திருவிழா திருப்பலி நடத்தினார். மேலும் 300 பேருக்கு வான் விருந்து நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலையில் முதல் முறையாக மிகப்பெரிய ஆடம்பர தேரில் பாத்திமா அன்னை எழுந்தருள புதுக்குப்பத்தில் இருந்து தேர் பவனி தொடங்கியது. ரோம் தொன் குவனெல்லா பன்னீர் ராசா, பெங்களூர் மறை போதகர் ஜெர்மானஸ் இருதயராஜ், புதுவை பாஸ்டர் டேனில், பாத்திமா அன்னை ஆலய பங்குத்தந்தை பால் ராஜ்குமார் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்க விருத்தாசலம் பாத்திமா அன்னை ஆலயம் வரை தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். நேற்று காலை 6 மணிக்கு திருப்பலியும் அதனைத் தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்