விராலிமலை முருகன் கோவிலில் தெப்ப உற்சவம்

விராலிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி தெப்ப உற்சவம் நடைபெற்றது.

Update: 2023-06-03 18:08 GMT

முருகன் கோவில்

விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக 11 நாட்களுக்கு நடைபெறும். இந்நிலையில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 10-ம் திருவிழாவான நேற்று தெப்ப உற்சவம் நடைபெற்றது.விராலிமலை தெற்கு தெருவில் உள்ள தெப்பக் குளத்தில் உள்ள மண்டபத்தில் முருக பெருமான் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தெப்ப உற்சவம்

அதனை தொடர்ந்து முருக பெருமான் வள்ளி-தெய்வானையுடன் தெப்பக்குளத்தில் நிறுத்தப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளினர். பின்னர் தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மயில் வாகனத்தில் முருக பெருமான் வள்ளி-தெய்வானையுடன் தெப்பக் குளக்கரையில் இருந்து 4 ரத வீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்