தேனி மாணவர் சாதனை

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்று தேனி மாணவர் சாதனை படைத்துள்ளார்.

Update: 2022-06-22 18:08 GMT

சட்டீஸ்கர் மாநிலம் ராய்பூரில் இந்திய ரோலர் ஸ்கேட்டிங் கூட்டமைப்பு சார்பில் தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் கடந்த 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடந்தன. இதில் 19 மாநிலங்களை சேர்ந்த 1,400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் தேனி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமியை சேர்ந்த மாணவர் சர்வந்த் 5 முதல் 7 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் ஆயிரம் மீட்டர் போட்டியில் கலந்துகொண்டார். அந்த போட்டியில் அவர் 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். பதக்கம் வென்ற மாணவருக்கு பயிற்சியாளர் ஆனந்தபாபு மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்