தேனி அரசு மருத்துவமனையில் தொழுநோய் ஒழிப்பு ஊர்வலம்

தேனி அரசு மருத்துவமனையில் தொழுநோய் ஒழிப்பு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-01-30 18:45 GMT

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்புத்திட்டம் சார்பில், தொழுநோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர்வலத்திற்கு மருத்துவ கல்லூரி துணை முதல்வர் கண்ணன் போஜராஜ் தலைமை தாங்கினார். மருத்துவ மற்றும் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் டாக்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை கோஷமிட்டபடி சென்றனர்.

பின்னர் தொழுநோய் வாரம் கடைபிடிப்பு குறித்து உறுதிமொழி ஏற்றனர். தொழு நோயாளிகளுக்கு ஊன்றுகோல், காலணி, கண்ணாடி மருத்துவ பொருட்கள், போர்வைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தொழுநோய் துறையின் துணை இயக்குனர் ரூபன்ராஜ், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர்கள் முருகமணி, ஜனார்த்தனன், வெங்கடேசன் மற்றும் டாக்டர்கள் பேராசிரியர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்