மின்மாற்றி உதிரிபாகங்கள் திருட்டு
உடன்குடியில் மின்மாற்றி உதிரிபாகங்கள் திருடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
குலசேகரன்பட்டினம்:
உடன்குடியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய உபமின்நிலைய வளாக பணியாளர் குடியிருப்பு பகுதியில் புதிய மின்மாற்றிகள் வைக்கப்பட்டு இருந்தன. அதை உபமின் நிலைய உதவி ெபாறியாளர் மகாலிங்கம் நேற்று ஆய்வு செய்தபோது, 4 மின்மாற்றிகளில் உள்ள ஆயில், காப்பர் ஒயர் உள்ளிட்ட உதிரிபாகங்களை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் ஆகும். இதுகுறித்து உதவி ெபாறியாளர் மகாலிங்கம் குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.