ரூ.90 ஆயிரம் திருட்டு

சிங்கம்புணரியில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.90 ஆயிரம் திருட்டு போனது.

Update: 2022-11-21 18:45 GMT

சிங்கம்புணரி, 

சிங்கம்புணரி அண்ணா நகரை சேர்ந்தவர் முகமது ரபிக் (வயது 48). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த வாரம் விடுமுறைக்காக தனது சொந்த ஊரான சிங்கம்புணரிக்கு வந்துள்ளார். நேற்று மதியம் ஒரு அரசு வங்கியில் இருந்து ரூ.90 ஆயிரத்தை எடுத்து தனது இருசக்கர வாகனத்தின்(ஸ்கூட்டி) சீட்டுக்கு அடியில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டினார். பின்னர் அந்த வாகனத்தை எடுத்து கொண்டு அதே சாலையில் உள்ள மற்றொரு அரசு வங்கி முன் வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்று உள்ளார். பின்னர் வங்கி பணிகளை முடித்து விட்டு திரும்பி வந்து பார்த்த போது, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 90 ஆயிரம் ரூபாயை காணவில்லை. அதை யாேரா திருடி சென்று விட்டனர். இது குறித்து சிங்கம்புணரி போலீசில் அவர் புகார் செய்து உள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்